Wednesday 14 November 2012

நான் தேடும் நாட்கள் - பகுதி 1,உள்-2



                        

                            துரத்திச்சென்ற கனவுகள் -2



                                       இரவு, வழக்கம் போல்  என் தாத்தா வந்தார் ,எப்போதும் போல......... எங்க அப்பா மயிலாதுறை ஜில்லா இன்ஸ்பெக்டரா இருந்து என்ன ப்ரோயோஜனம்? அந்த காலத்துலேயே நூறு ரூபாய்க்கு இடம் வாங்கி போட்டிருந்தா இப்போ லட்சம் கிடைச்சிருக்கும்....ஊர்ல பேரு மட்டும் ஹோநேஸ்ட் அருநாச்சலம்னு வாங்கிவிட்டார் அதனால் சல்லி காசுக்கும் உபயம் இல்ல,அந்த காலத்தில் வெள்ளைக்காரன் சன்மானமா கொடுத்த நிலத்தையும் வேணாமின்னிட்டார்.....தனது பாணியில் புலம்பி கொண்டே வருவார்!......எனக்கு இதில் எப்போதும் உடன்பாடில்லை, கடவுள்தான் தான் நமக்கும் ரெண்டு கைகால் கொடுத்திருக்காரே ,யாரோ சம்பாதிப்பதில் தான் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்
பது என்ன லாஜிக் என முனுமுனுத்துக்கொள்வேன்!  உண்மையில் பெண்ணாசையைவிட   மண்ணாசை  இல்லாத அந்தகாலத்து மனிதர்களே இல்ல போல,அதுவும் சொந்த ஊரை விட்டு மதராஸ் வந்தா நல்லா வசதியா வாழலாம்னு நெனெச்சு வந்தவங்கதான் பாவம்......உண்மையான சுகத்தை விட்டுவிட்டு காசுக்காக இயங்கும் இயந்திரமாக மாறிவிட்டனர்!........ பின்னாளில் என்னதான் நிறையா சம்பாதிச்சு முடிச்சாலும் அதை அனுபவிக்க நேரமும் சரி,உடலும் சரி ஒத்துழைக்காமல் ஏமாற்றிவிடதான் போகிறது...என்பதுதான் உண்மை..புத்திசாலி இன்றைக்காக வாழ்வான்! .........எவ்ளோ இருந்தாலும் பத்தாதுன்னு நினைகிரவங்கள என்னதான் பண்றது?.!அவரும், என்னதான் அரசாங்க அலுவலராக இருந்தாலும் மாதம் வரும் பணத்த புத்தகம் வாங்கியே குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்....பற்றாக்குறைக்கு யாருனே தெரியாதவங்களுக்கு பாங்க்ல  செக்யூரிட்டி கையெழுத்து போட்டு எக்கசெக்கமாய் மாட்டியும் வேறு இருந்தார்!... அரசாங்க வேலை  கிடைத்தவுடன் திருவாரூரில் பண்ணையார் மகளாய் திருந்து கொண்டிருந்த என் பாட்டியையும் பன்னிரண்டு வயதிலேயே திருமணம் செய்துவிட்டர்னர்... ஆறு பெண் பிள்ளைகள் பதினெட்டு வயதில் ! இனி சொல்லவா வேண்டும்? அந்த காலத்தில் மனிதர்கள் எவ்வளவு முட்டாள்  தனமாகவும் இருந்திருக்கிறனர் என்று வேதனை பட்டதும் உண்டு!. 



                                                                      என் கோபத்திற்கெல்லாம் ஒரே காரணம்தான் தூண்டுகோலாய் இருந்தது.. பள்ளியிலேயே முதல் மாணவியாய்  வந்த என் அம்மாவின் கனவை தவுடுபோடி ஆக்கியதுதான்! டாக்டராக விரும்பிய அவரை பணத்தாலும் சரி,பெண் என்ற முத்திரையாலும் சரி " உன்னை படிக்க வைத்தால் இன்னும் ஐந்து பெண்களை எப்படி கரைசேர்ப்பது " படித்தது போதும் என தாத்தா அடித்தது ,இதனால்.. எங்க அம்மா அவரிடம் பல நாள் பேசாமல் இருந்ததாக கூறியதும்!.... சரி,.. சிலர் கனவுகள் ......எப்போதும் கனவாக மட்டுமே இருந்துவிட்டு போகட்டும் என்று மனதை தேற்றிகொள்வதையன்றி வேறு வழியில்லை..:( என்னையாவது படிக்க வைத்து பெரிய டாக்டராக்கி விட வேண்டும் என்றுதான் எதற்கும் உதவாத என் அப்பாவை விட்டு மதராஸ் அருகில் குடி ஏறினார்.... ,திருமணம் ஆனா பின்னராவது நிம்மதியாய் வாழலாம் என நினைத்திருந்த அவர் ரெண்டாம் கனவும் தவுடுபோடியானது ... மாதம் மூந்நூறு ரூபாய் பணத்திற்காக தினம் நான்குமணி நேர  தூக்கம்... துணிக்கடை ,பாட்டில் கழுவ காஞ்சிபுரத்தில் இருந்து திருவல்லிக்கேணி சென்று வந்தார்..... இப்படித்தான் எல்லா கனவுகளும் சுக்குநூறாய் உடைய , பின்பு பக்குவமும் வந்து விடுகிறது.... இன்று எல்லாம் இருந்தும் பக்குவபட்ட மனது ஆடம்பரங்களில் பெரும்பாலும் வீழ்வதில்லை...! என் தாத்தாவோ இத பற்றி எல்லாம் கவலை பட்டதாய் தெரியவில்லை "ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை வேண்டும்ற " பழ மொழியை மற்றும் பின்பற்றி இருந்தார்.. ஏழாவதாய் மகன் பிறக்கும் வரை அவரும் நிருத்தவில்லை..... என்ன ப்ரோயோஜனம்?...உன் மாமாவையும்,தாத்தாவையும் போல நீயும் உதவாகரையாய் இருந்துவிடாதே என்று சொல்லி மட்டுமே வளர்த்தாள் என் அம்மா....குடும்பதிர்க்காக ஓடி ஓடி உழைத்தும் அவர் மீது அன்பு காட்டவும் யாரும் இருந்திருக்கவில்லை....சில சமயம் யோசித்து பார்த்தால் .. சிலர் எதற்காக சில முட்டாள்தனத்தை வேன்றுமென்ற செய்கிறார்கள் என்று எனக்கும் புரிந்திருக்கவில்லை... போகட்டும் எல்லாம் பாசம் என்னும் மாய வலை! இது ,கடவுள் நம்மை கட்டுபடுத்த பின்னிய தந்திரமான வலை ....அவர் வந்து நிற்கும் முன் எல்லா எண்ண அலைகளும் என் கண்முன்னே தோன்றி மறைந்துவிட்டது!.... என் தாத்தா வயதாகி இருந்தாலும் என்ன ஜடகாதிரமாய் இருந்தார், அந்த காலத்து மனதர்கள் செய்த ஒரே நல்ல விஷயம்...இப்படி சாபாட்டிற்கு  வஞ்சகம் வைக்காதது மட்டும்தான் போல் இருந்தது... !உண்மையில் அப்படிபட்ட சத்தான ஆகாரங்கள் இப்போ கிடைக்க வாய்ப்பில்லை!.... இந்த நவீன உலகிற்கு அதை பற்றி கவலையும் இல்லை.... எப்படித்தான் இருந்தாலும் என் தாத்தாவிடம் பிடித்த ஒரே விஷயம்னா அவர் அறிவியலிலும் சரி, வெள்ளைகாராதுரை ஒருத்தர் கிட்ட கத்துகிட்டிருந்த ஆங்கில மொழி புலமையிலும் பின்னி பெடலெடுப்பார்!... மற்ற வீட்டை போல இல்லை, எங்கள் வீட்டில் கதை சொன்னாலும் அறிவியல் சார்ந்த கதைகள்தான்!......   கடைதெருவிர்க்கு செல்லும்போது அவர் சொல்லும் அறிவியல் ஆராய்ச்சி கதைகளுக்கு இரவில்தான் பதில் சொல்லுவார்!....ஆமாம் அந்த நிலாவும்,நட்சத்திரமும் தான் எங்களுக்கு பாடசாலையாய் இருந்தது..........! நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எரிந்த நட்சத்திரம் தான் இன்று நம் கண்களுக்கு புலப்படுகின்றனவாம்,நிலா தானே வெளிச்சம் தராது தெரியுமா?? ... என்று அவர் அடுக்கிக்கொண்டே போக!...... நமது மனிதனின்  வாழ்நாள் மட்டும் ஏன் இவ்வளவு குறைவு  என ஆகாயத்தை வெறிக்க பார்த்ததும் உண்டு!!... அவர் சொன்ன கதைகளோடு கூரைக்கு அடியில் படுத்தால் அங்கேயும் ஓட்டைகள் வழியே அவை என்னிடம் பேச தொடங்கும்.சரி ,.... கவலை வேண்டாம் இப்போதுதான் நவீனத்துவம் எவ்வளவோ வளர்ந்து விட்டதே.. நானும், உங்களை ஒருநாள்  ஆம்ஸ்ட்ராங் கால்ப்பதித்ததைபோல் வந்து பார்கிறேன் என்று உறுதி கூறி கண்மூடினேன்!!....................................................

                                                          கனவிலேயும்  வந்து தொல்லை செய்த அற்புதங்கள், என் அம்மா அடேய் என எழுப்பியதும் உறைந்து போயின... என்ன நடக்குது என சுற்றி பார்த்தேன்! அப்போதுதான் உணர்ந்தேன் இன்று என்னிடம் மீதம் இருப்பது கனவுகள் மட்டுமே..........கடந்தகால வாழ்கையை நம்மால் திரும்ப பெற முடியாது ,..ஆனால் அவை விட்டு சென்ற வடுக்களும்,கனவுகளும் மட்டும் நெஞ்சில் எதோ ஒரு ஓரத்தில் நீற்குமுழியைபோல் தொற்றிக்கொண்டு இருக்கின்றன!..... இனி அந்த வாழ்கையை மீண்டும் பெறவே முடியாதே என்று எண்ணி கலங்கிப்போனேன்!!! .இதுதான் வாழ்கை! நேரமும் வாழ்கையும் பின்னிபினைந்த ஒன்று.. இனி வெறும் கனவு மட்டும் போதாதென்று விழித்தெழ தொடங்கினேன்!


---- கனவுகள் தொடரும்------  
           © Shraavan Kumar


Tuesday 13 November 2012

நான் தேடும் நாட்கள் - பகுதி 1,உள்-1


                            துரத்திச்சென்ற கனவுகள்  -1

                                                 வழக்கம் போல நானும் எனது பெரியம்மா மகளும் கைகோர்த்து பள்ளிக்கு செல்ல தொடங்கினோம் அன்று! எங்கள் மாமா மின்பொறியியலில்  வல்லவர், அவரின் ஆராச்சியால் ஒரு பழைய ரெகார்டர் எங்கள் வீட்டில் வானொலியாய் தொங்கிக்கொண்டிருந்தது......எங்கு நிறுத்திவிட்டால் வேலைச்செய்யாமல் போய்விடுமோ என்று இருபத்துநான்கு மணிநேரமும்  அதை ஓடவிட்டுக்கொண்டிருந்தனர்! சில நேரம் அதில் செய்தி  வாசிப்பவர்தான் எங்களுக்கு கடிகாரம்!... ரமணி  அன்று வழக்கம்போல்  செய்தி வாசிக்க தொடங்கிவிட்டார்...... மணி எட்டரை இன்னுமா போகல? என்று  குரல் அதட்ட , பாட்டி  ஊட்டும்  சாப்பாட்டை அவசர அவசரமாய் தின்றுவிட்டு.அவர்கள் காணும் வரை ஓடிவிட்டு பின் இருவரும் ஆடுமந்தைபோல் சென்ற மற்ற பள்ளி மாணவர்  கூட்டத்தோடு கலப்பது வழக்கம்!.வீட்டிலிருந்து பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர் தூரம்!..எவ்வளவு தூரம் இருந்தாலும் சரி, கடைசி பதினைத்து நிமிடத்தில் தயாராகி செல்வதில்தானே எத்தனை சுவாரசியம்!. அன்று ஏனோ முன்னர்நாள்  மழை காரணமாக அவ்வளவாக யாரும் வரவில்லை, மதிய உணவும்  பையில் ஒன்னும் இல்லை, இருக்கும்  ஒரு நோட்டை இருவரும் கையில் பிடித்துக்கொண்டு தலை வரை தூக்கிவீசியபடி கணக்கு பாடல்களை  பாடிக்கொண்டே நடந்தோம்!... எங்க சரித்திர வாத்தியார் திரு.லாரான்ஸ் கதைகளை சுவாரசியத்துடன் சொல்வதை  தவிர சில நேரம் எங்களுக்கு வாய்பாட்டு  பாடல்களும் சொல்லிக்கொடுத்து நினைவிருக்கிறது!. பள்ளியில் தூங்குவதும், காலை போகும்போது  அவளிடம் இன்னைக்கு  என்ன தேர்வு,வகுப்பு என நச்சரித்துவிட்டு...முன்பு கொஞ்சம் மனப்பாடம் செய்தவற்றை செரியா என்று அவளிடம் ஒப்பிபதும் உண்டு.எதோ ஒரு வகுப்பு வேண்டாம் என்பதற்காக ஆரிசியைக்கு ஜுரம் வந்துவிட வேண்டும் , தேர்வு இருந்தால் மழை பெய்ய வேண்டும் என்றும் தெருவோர பிள்ளையாரிடம் கண்களினாலே வேண்டிக்கொள்வோம்! அவரும் பல முறை எங்களுக்கு உதவியதும் உண்டு!... அவர் என்ன செய்தாலும்சரி அடுத்த விநாயகர் சதுர்த்தியில் எங்கள்  கொழுக்கட்டையில் இரண்டு அம்மாவுக்கு தெரியாமல் தருவதாய்  ஜென்டில்மன்அக்ரிமென்ட் முன்னதாகவே போட்டுவைதிருந்தோம்! ஹஹா :)


                         திடீரென்று ஞாபகம் வந்தது! இன்று செய்தியில் ரமணி மழை வராதென்றுதானே சொன்னார்ல? அப்போ நிச்சயம் வருமுன்னு தங்கையிடம் பந்தயம் கட்டினேன்... 
கனவாகிய நினைவுகள்!
 பதிலுக்கு பாட்டி கொடுத்த பத்து பைசாவில் ,தோற்றவர் இன்னொருவருக்கு காரம் வாங்கி தரனும்னு சொல்லிகிட்டோம்! ஹ்ம்ம் அவளுக்கும் இது பிடித்திருந்தது... தேர்வில்  இருந்து தப்பிக்க ஆசை பாடாதவர்தான்  யார்? . பின்னிருந்து யாரோ  கூப்பிடும் குரல் கேட்டது, ஆமாம் அவள் தான் ஜனனி, அத்தையுடன் மதராசிலிருந்து வந்து அவள் கூடிய அலபரைகளை அப்போதே என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை....! நீண்ட நாள் திட்டம் தீட்டி அவளை தனியாக விட்டு வந்தும் எப்டி வந்தாலோ என்று தலையில் கை வைத்துக்கொண்டேன்!!........ எங்கள் இருவருக்கும் நடுவில் வந்து புகுந்து கொண்டாள்!..சரி இனி வேறு வழி இல்லை ,பாடத்திலிருந்து எதாவது கேள்வி கேட்டா... ,தானா போய்விடுவாள் என ஊகித்திருந்தேன்.திடீரெண்டு மெலிய காற்று வீச தொடங்கியது, மழை வரும் என எனது உள்ளுணர்வு சொல்லிகொண்டது! என்ன தான் சந்தோசமா இருந்தாலும் அன்று வெள்ளிகிழமை! வெள்ளை நிற சீருடைன்னா ரொம்ப பிடிக்கும் அழுகாயிடுமேன்னு ஒரு பக்க கவலை வேறு.... நாங்கள் செல்லும் பாதையில்தான் அந்த பணக்காரர்களின் வீடுகளும் இருந்தது , அங்கிருந்து வரும் பவழவல்லி பூ வாசனை என்னை எப்போதும் ஈர்க்கும், பல முறை கொஞ்சம் பூ கொடுங்களேன்னு அந்த பணக்கார அத்தையிடம் கேட்டுப்பார்த்து சோர்ந்து போனதுதான் மிச்சம்! உதிர்ந்து போன பூக்களை கூட குழந்தைகளுக்கு கொடுக்க முடியாத அவள் ஒரு  பணக்கார ஏழை என என்னிடமே  சொல்லிகொள்வேன்!! , அதை திருடுவதற்காக பலமுறை முயற்சி செய்து அவங்க வீட்டு  அல்செசியன்கிட்ட மாட்டி அழுததும் உண்டு! ஹஹா...  ஜனனிக்கு பாம்புனா பயம்! மழை பெய்தால்தான் எங்க வீட்டுல அது பணக்காரவங்க வீட்டு ஷோவேர் மாதிரி கொட்டும் ..ஆச்சே,வரும் தண்ணி பாம்புக்கே அப்புடி பயபடுவா.!... கையில் கொஞ்சம் காய்ந்த பூக்களை எடுத்துக்கொண்டு பவழவல்லி பூக்கள்னா பாம்புக்கு எங்கிருந்தாலும் நுகர்ந்து வந்திருமாமேனு சொல்லிவெச்சேன்....அவ்ளோதான், எதுக்கும் நல்லதுன்னு பின்னாடி தொடர்ந்து வந்தா....காற்று  வேகமாக அடிக்க தொடங்கியது ,அந்த பூக்களின்  மணம் பரவி .. இன்னும் என்னை  ஈர்த்தது! அசுர காத்துல மரம் ஒன்னு ஒடிந்து வீழ்ந்தது,  கண்களை மூடி கொண்டே நகர்ந்து சென்ற என்னை பின்னிருந்து  பிடித்து இழுத்தால் ஜனனி...! இனி இந்த வழியே போக முடியாது என்று அடுத்த தெருவிற்குள் நுழைவதற்குள் மழை ஜோராக  பிடிக்க ஆரம்பித்துவிட்டது.கொஞ்சம் ஓடி போய் ஒரு ரோடோர கடையின் முனையில் மூவரும் தஞ்சம் அடைந்தோம்..... ஒவ்வொரு மழை பெய்யும்போதும் முதலில் குதூகலமும் ..பின்பு, இது அமிலமழை என வருத்த பட்டுக்கொள்வேன்!... அப்போதுதான் நல்ல வேலையாக விரைவாக மிதிவண்டியை அழுத்திக்கொண்டு வந்த பெரியவர் தேங்கி இருந்த தண்ணீரை வாரி  அடித்துவிட்டு கண்டும் காணாததுமாய் போனார்... முதலில் கோபம் வந்தாலும் ,இனி நிச்சயம் பள்ளிசெல்லமுடியாது என நினைத்து அவருக்கு டாட்டா கூறினோம்!...புன்சிரிப்புடன். இனி ஒன்னும் செய்ய முடியாது என மூவரும் சேற்றில் இறங்கி விளையாட தொடங்கினோம்! மழையில் மழலைகளும் கரைந்தால் தான் எத்தனை ஆனந்தம்!.. அந்த வருண பகவானும் உலகை மன்னித்து எங்களுக்காக இன்னும் கொஞ்சம் மழை பொழிந்தார்!...... வழக்கம் போல் தேர்வுத்தாளை கிழித்து காகிதா ஓடம்  செய்தோம் ,அதன் மீது ஒரு பொன்வண்டை பிடித்து விட்டு,நாங்களும் ஓடம் போகுமிடமெல்லாம் ஓடினோம்!.... காஞ்சிபுரத்தில் இப்படி மழை பெய்தால் அடுத்து நிச்சயம் செம்பரம்பாக்காம் ஏரி திறந்து விடுவார்கள் என்று எங்களுக்கு தெரியும்! சரி எனது பைசா எங்கே என கேட்டு ..காரம் வாங்கி மூவரும் வீடு நோக்கி நடக்க தொடங்கினோம்! ஜனனியை அவள் அத்தை வீட்டில் விட்டுவிட்டு நானும் தங்கையும் பிடித்த மழை பாடக்களை பாடிகொண்டே ஓடினோம்!.


                           அப்போதுதான்  ஞாபகம் வந்தது!.......... அக்காலங்களில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இருந்ததில்லை ,பக்கத்துக்கு வீடு அக்காவிடம் இருந்த ஒரு ஓட்டை கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் எப்படியாவது வெள்ளிகிழமை மட்டும் பொதிகையில் ஒலியுமொளியும் கேட்க வாரம் முழுவதும் எங்கள் சிறுசேமிப்பு ஐன்பது ( ஐந்து பத்துபைசா) தெருவோரம் கோலி விளையாடி சம்பாதிப்பது என் பழக்கம்...சரி வா போவோம் இன்று முக்கியமான நிகழ்ச்சி இருக்குனு அவள் கையை இருக்க பிடித்துக்கொண்டு நடந்தேன்,...வீட்டிற்கு சென்றவுடன் யாருக்கும் தெரியாமல் வாங்கிய சினிமா பாடல் புத்தகத்தை அலமாரியில் ஒழித்துவைதாகவேண்டுமே! ..என்று என் கவலை...எனக்கு.!..எனது பெரியம்மாவிற்கு இரண்டு மகள்கள் இருந்தும்  ஐஸ்வர்யாவிடம் ரொம்ப  பிணைப்பு எனக்கு, தங்கை என்றாலும் என்னை விட மூன்று மாசம் தான் சிறியவள், ஒரே வகுப்பு வேறு! பள்ளி,வீடு ,விளையாட்டு என எப்போதும் அவளுடனே இருப்பேன்.அவங்க அப்பா இருந்தா மட்டும் கொஞ்சம், .. பயம் எப்போதும் ஏன் அப்டி முரைபாருனே தெரியாது, ஒரு தனியார் நிறுவனத்தில்செக்யூரிட்டியாக பணிபுரிந்துக்கொண்டிருந்தார்...அவர் பெரும்பாலும் வேலை காரணமாக வாராதது எனக்கு மட்டும் நல்லதுன்னு பட்டுச்சு...இந்த ஆச்சாபுரகாரவன்களே அப்புடிதான்னு நெனெச்சேன்! சில சமயம் நான் தஞ்சவூர்கரன்னு பெருமை பட்டு கொண்டதும்  உண்டு.. .சின்ன வயசுலர்ந்தே சரித்திர கதைகள் படிப்பதுனா ரொம்ப பிடிக்கும்!....தஞ்சாவூர்,பெரிய கோவில் என இடம்பெரும் இடமெல்லாம் நானும் சோழர் பரம்பரையில் வந்தவன் என நினைத்து மாறு தட்டி கொள்வேன்!.

                   
                       எப்போதும் எங்களுக்குள் ஒரு போட்டி உண்டு படிப்பிலும் சரி, வீட்டிலும் சரி... எங்களுக்குள் போட்டி வெறி இருந்ததோ இல்லையோ தெரியவில்லை, எங்கள் பெற்றோர்களின்  பெருமைக்காக எங்களை போட்டி போட வைத்தனர்...ஆனால் அனைவருக்கும் தெரிந்திருந்தது அவளுக்கு இருந்த ஐயோடின் குறைபாட்டினால் எதையும் அவ்வளவு எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது.....:( நான் வகுப்பிலேயே முதல் மாணவனாய் வந்திருந்தும், அவள் வருத்தப்படுவாள் என சில சமயம் வேண்டுமென்றே தவறாக பதில் எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றதும் உண்டு!,,,, நம்மை விட நமக்கு பிடித்தவர் சந்தோசமாய் இருந்தால் நமக்கும் சந்தோசம்தானே!..........பெருமை வேண்டாம்.. இதுவும் ஒருவித சுயநலம் தான்!! :) . என் அம்மாவிடம் இருந்ததை விட அவர்கள் வீட்டில் தான் அதிகம் இருந்தேன், எப்போதும் ஐஸ்சு ஐஸ்சுனு எல்லாவற்றையும் அவளிடம் கொட்டி தீர்த்துவிடுவது என் வழக்கம்...அது நேற்று தூக்கத்தில் நான் கண்ட கனவிலிருந்து தொடங்கி பள்ளியில் ஆசிரியரிடம் நான் வாங்கிய குட்டு வரை நீண்டுகொண்டே போகும்,.... சில சமயம் காரணமே இல்லாமல் பேசுவதற்காய் பேசியதும் உண்டு!. எனது பெரியம்மாவும் அவர் குடும்பத்தினரும் பின்னால் இருந்த வீட்டில் தங்க வந்து ஒருவருடம் ஆகிவிட்டது! வீடில்லாமல் இங்கு வந்தபோது எங்கள் வீட்டுபின்னே தங்கவைத்துக்கொண்டோம்! இத்தனை நாலாய் தனி பிள்ளையாய் இருந்த எனக்கும் விளையாட ஆள் கிடைத்துவிட்டனர் என அவர்கள் வரும் அன்று பூரிப்பில் நானும் தூங்கவில்லை....எங்கள் வீடும் பெரியதில்லை கதவுக்கு பதில் திரை, கழிபரையில்லை,கூரைகளிடையே ஒழுகும் மழை சாரலுடன்.... ஆயினும் அப்போ இருந்தது போல் எப்போதும் அவ்வளவு சந்தோசத்துடன் வாழ்ந்ததில்லை...

                                            ஆரரைமணி ஆரம்பித்த  ஒலியும் ஒளியும் குதூகலமாய் முடிந்தது...இப்போது முழு ப்லாட்டாக மாறிவிட்ட எங்கள் ஊர் அப்போது அப்படி இல்லை.சுற்றி வயல்களும்,நீர் பாசனங்களும்.எங்கள் ஊரை பார்க்கும் போதெல்லாம் நாம் படித்த மதராசைபோல் இங்கும் ஆழ்துளை கிணறுகள் வந்து வற்றிப்போனால் என்ன செய்வது என வருந்தியதும் உண்டு!.........அப்போதெல்லாம் தெருவிற்கு இரண்டு மூன்று வீடுதான் இருக்கும்.. என் பெரியக்காவின் திகில் கதைகளுக்கு பயந்தே! இரவானால் வரபிற்க்கு வந்து தங்கையுடன் கண்ணாமூச்சி என தெரு பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது வழக்கம்.என் அப்பாவை விட உண்மையில் என் அம்மா கடின உழைப்பாளி இரவு பன்னிரண்டு மணிவரை தூங்காமல் காத்திருந்தாலும் அவரை பார்க்க முடியாது.... :(  ஒருவேளை இது கூட என்னை தங்கையிடம் அதிக நெருக்கத்துடன் வைக்க உதவி இருக்கலாம்....பெரியம்மா மகள் என இப்போதெல்லாம் பிரித்து பேசும் சமுதாயத்தில் நாங்கள் அண்ணன்,தங்கை என உரிமை கொண்டாடுவதில் பெருமைபட்டுக்கொண்டிருந்தோம்!...

---- கனவுகள் தொடரும்------  
           © Shraavan Kumar